காய்கறிகள்,மளிகைபொருட்கள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் திறக்க அனுமதி கலெக்டர் ஆணை!
வேலூர் மாவட்டம்: காய்கறிகள், மளிகை பொருட்கள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் திறக்க அனுமதி கலெக்டர் ஆணை!
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுபடுத்தும் பொருட்டு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . இந்த கூட்டத்தில் வணிகர்சங்கத்தினர் , ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர், துணிக்கடை சங்கத்தினர் , மற்றும் அரசுத்துனற அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வேலூர் மாவட்ட கலெக்டர் திரு சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசினார்கள்.கலெக்டர் பேசியாதவது:- வேலூர் மாவட்டத்தில் கடந்த சில் நாட்களாக கொரோனா பாததிப்பு அதிகமாகி வருகிறது 2 வாரங்களில் மட்டும் கொரோனா தொற்று எண்ணிக்கை 10மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது .
வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் கடைகள்:-
நேற்று முன்தினம் வரை மாவட்டம் முழுவதும் 408பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.வேலூர் மாவட்டம் முழுவதும் காய்கறி ,மளிகை கடைகள் (சில்லரை விற்பனையாளர்கள்) மற்றும் நகைக்கடை ,துணிக்கடைகள் ஆகியவை திங்கள் ,புதன் வெள்ளி ஆகிய நாட்களில் மட்டுமே செயல்படும் என கலெக்டர் அறிவித்தார்கள். கடைகள் திறக்கும் நேரம் காலை-6 மணிமுதல் மாலை -6மணி வரை மட்டுமே செயல்படும் மற்ற நாட்களில் விடுமுறையாகும் . மளிகை பருப்பு அரிசி ,தானியங்கள் . நவதானியம் காய்கறிகள் மொத்த விற்பனை கடைகள் திங்கள் ,புதன் ,வெள்ளி ஆகிய 3நாட்களில் இரவு10மணி முதல் காலை 6மணிவரை இயங்கப்படும் . இதை தவிர ஓட்டல்கள் ,பேக்கரிகள் ஞாயிற்றுக்கிழமையை தவிர மற்ற 6 நாட்களும் காலை 6 மணிமுதல் மாலை 6மணிவரை திறக்கவும். பார்சல் மட்டும் வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.; இறைச்சி மீன்கடைகள் ஞாயிறு,புதன் கிழமைகளில் காலை 6மணி முதல் மாலை 6 மணிவரை திறந்திருக்கும்.
பேட்ரோல் பங்குகள்,மருந்துகடைகள் அனைத்து நாட்களும் திறந்திருக்கலாம் உழவர்சந்தைகள் திங்கள் ,புதன் ,வெள்ளி ஆகிய நாட்களில் காலை 6மணிமுதல் மாலை 6 மணிவரை இயங்கவேண்டும் .
வேலூரில் சாரதி மாளிகையில் உள்ள கடைகள் திங்கள்,புதன் ,வெள்ளி ஆகிய 3நாட்களும் காலை 6மணி முதல் மாலை 6மணி வரை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நடைமுறையானது இன்று முதல் அமலுக்கு வருகிறது. மாவட்டத்தில் உள்ள டீ கடைகள் ,சலூன் கடைகள் அழகு நிலையங்கள் போன்றவைகள் வருகிற 30ஆம் தேதி வரை திறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தகவல்கள்:-
வேலூர் சுண்ணாம்புகாரதெரு, ரொட்டிகாரதெரு, அண்ணா பஜார் , நியுசிட்டிங்பஜார் பர்மாபஜார் ஆகாபஜார் , ஆகிய தெருக்களில் உள்ள கடைகள் மூடப்படுகின்றன .
நேதாஜி மார்க்கட் ,மண்டித்தெருவில் செயல்படும் மொத்த காய்கறி வியாபார கடைகள் அனைத்தும் கிருஷ்ணா தியேட்டர் எதிரில் உள்ள மாங்காய மண்டியில் இனி தொடங்கும்.
நேதாஜிமார்கெட் ,மண்டித்தெரு லாங்குபஜார் பகுதிகளில் காணப்படும் கடை வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யவேண்டும் .அதில் கொரோனா இல்லை என்று தெரிய வந்தால் தான் அவர்கள் கடைதிறக்க அனுமதிக்கப்படுவார்கள் . அது வரை அந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் .இவ்வாறு வேலூர் மாவட்ட கலெக்டர் அவர்கள் தங்களின் அறிக்கையில் கூறியுள்ளார்கள்!